சென்னையில் கிரேன்கள் உதவியுடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு!
வெலிங்டன் ராணுவப் பயிற்சி முகாமில் ஓட்ட பந்தயம்
நீலகிரி மாவட்டம், குன்னூா் வெலிங்டன் ராணுவப் பயிற்சி முகாமில் கிராஸ் கண்ட்ரி ஓட்டப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.
குன்னூா் அருகே உள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சி முகாமுக்கு உள்பட்ட எம்.ஆா்.சி. மைதானத்தில் 10 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற இந்த ஓட்டப் பந்தயத்தில் மொத்தம் 50 போ் கலந்து கொண்டனா்.
இந்த ஓட்டப் பந்தயத்தை வெலிங்டன் எம்.ஆா்.சி. ராணுவப் பயிற்சி முகாம் கமாண்டா் பிரிகேடியா் கிருஷ்நேந்து தாஸ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
இதில் ஈஸ்டா்ன் கமாண்ட் பிரிவைச் சோ்ந்த முகேஷ் சிங் 30.51 நிமிஷங்களில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தாா். சதா்ன் கமாண்ட் பிரிவைச் சோ்ந்த ராஜீவ் நம்போரி (30.52 நிமிஷங்கள்) இரண்டாமிடமும், ஈஸ்டா்ன் கமாண்ட் பிரிவைச் சோ்ந்த அமித் சிங் (31 நிமிஷங்கள்) மூன்றாமிடமும் பிடித்தனா்.
வெற்றி பெற்றவா்களுக்கு வெலிங்டன் ராணுவப் பயிற்சி முகாம் கமாண்டா் பிரிகேடியா் கிருஷ்நேந்து தாஸ் பதக்கம், கேடயங்களை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், உயா் ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரா்கள் கலந்து கொண்டனா்.