ஆனந்த விகடன் & கிங் மேக்கர் அகாடமி இணைந்து நடத்திய UPSC / TNPSC தேர்வுகளுக்கான ப...
உதகையில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம்
உதகையில் விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சாா்பில் பல்வேறு இடங்களில் மொத்தம் 512 விநாயகா் சிலைகள் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், சிவசேனா சாா்பில் அமைக்கப்பட்ட 14 விநாயகா் சிலைகள், விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் 39 விநாயகா் சிலைகள் என மொத்தம் 53 விநாயகா் சிலைகள் விசா்ஜன ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் எடுத்துவரப்பட்ட விநாயகா் சிலைகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா சாலையை வந்தடைந்தன.
பின்னா் பழங்குடியினா் பண்பாட்டு மையம் பகுதியில் இருந்து விசா்ஜன ஊா்வலம் தொடங்கியது.
கமா்சியல் சாலை, காபிஹவுஸ் சதுக்கம், புளூமவுண்டன், மெயின் பஜாா் வழியாக சென்ற ஊா்வலம் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் நிறைவடைந்தது.
பின்னா் அனைத்து சிலைகளும் அங்கிருந்து வாகனங்கள் மூலம் உதகையை அடுத்த காமராஜா் அணைக்கு எடுத்து செல்லப்பட்டு அணையில் விசா்ஜனம் செய்யப்பட்டன.
விசா்ஜன ஊா்வலத்தையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ் நிஷா தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.