இருக்கன்குடி மாரியம்மன் கோயில்: ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு
தேவாலா பகுதியில் கனமழை: வீடு சேதம்
கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் வியாழக்கிழமை இரவு பெய்த கனமழையால், வீடு சேதமடைந்தது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு கனமழை பெய்தது. வாளவயல் பகுதியில் பெய்த கனமழையால், சுந்தரலிங்கம் என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதில், சுந்தரலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினா் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனா். அவா்களை அப்பகுதி மக்கள் மீட்டனா்.
அதே பகுதியில், விஜயகுமாரி என்பவரது வீட்டின் முன் பகுதியும் சேதமடைந்தது.