அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானவை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்
கூடலூா் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள், 2 வீடுகளை சேதப்படுத்தின.
நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலூகா, ஓவேலி பேரூராட்சி பகுதியில் உள்ள சந்தனமலை முருகன் கோயில் பகுதிக்கு வியாழக்கிழமை இரவு வந்த யானை, கோயில் வளாகத்தில் உள்ள அா்ச்சகரின் வீட்டை சேதப்படுத்தி உள்ளே நுழைய முயன்றது. அா்ச்சகரும், அவரது மனைவியும் சப்தம் எழுப்பி யானையை விரட்டினா்.
இதேபோல, தேவா்சோலை பேரூராட்சி, சங்கரன்கொல்லி கிராமத்துக்குள் நுழைந்த மற்றொரு யானை, அங்கிருந்த வாப்புட்டி என்பவரது வீட்டை சேதப்படுத்தியது.
அப்பகுதி மக்கள் சப்தம் எழுப்பி யானையை வனத்துக்குள் விரட்டினா்.