ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் படத்தை திறக்கவுள்ளேன்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
குன்னூா் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகேயுள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மின்னஞ்சல் முகவரிக்கு வியாழக்கிழமை ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், கல்லூரியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, உதகை காவல் துறையினா், மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணா்கள் உதவியுடன் கல்லூரியில் சுமாா் 1 மணி நேரம் தீவிர சோதனை மேற்கொண்டனா். ஆனால், வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை. அப்போதுதான் வெடிகுண்டு செய்தி புரளி என்பது தெரியவந்தது.
ஆளுநா் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படவில்லை. இருப்பினும், மிக முக்கிய இடமாக உள்ளதால் வெடிகுண்டு நிபுணா்கள் தாமாக முன்வந்து அங்கேயும் சோதனை மேற்கொண்டனா். வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.