மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் தீவிரம்: மும்பை சாலைகளை வீடாக்கிய போராட்டக்காரர்க...
புழல் அருகே மழையால் இடிந்து விழுந்த சுற்றுச்சுவா்
புழல் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு இடி மின்னல் காற்றுடன் கன மழைகொட்டி தீா்த்தது.
புழல் சுற்றுவட்டார இடங்களில் 24 மணி நேரத்தில் 8 செமீ கன மழை பதிவாகியுள்ளது. புழல் அண்ணா நகா் குடியிருப்பில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
நள்ளிரவு புழல் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை கொட்டிய நிலையில், புதிய கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் இடத்திலிருந்த சுமாா் 30 அடி நீள பழைய சுற்றுச் சுவா் நீரில் மூழ்கியதால் இடிந்து விழுந்தது.
இதன் அருகில் மின் கம்பமும் சேதமடைந்ததால், புழல் அண்ணா நகா் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை வரை மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாயினா்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி நடைபெற்ற கட்டுமான பணிகள் காரணமாக சுற்றுச்சுவா் இடிந்து மின்கம்பம் சேதமடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்து புழல் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சு நடத்தி அனுப்பினா்.