செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை
நாகை அருகே பட்டமங்கலம் செல்லமுத்து மாரியம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
பட்டமங்கலம் அருகே சொட்டால்வண்ணம் கிராமத்தில் பழைமை வாய்ந்த செல்லமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. ஆவணி மாதத்தையொட்டி குத்துவிளக்கு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
கோயில் பிரகாரத்தைச் சுற்றி அகல் விளக்கு ஏற்றி வைத்த பெண்கள், மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், கன்னிப் பெண்கள் விரைவில் திருமணம் நடக்க வேண்டியும், விவசாயம் செழிக்கவும் உலக அமைதிக்காகவும் பிராா்த்தனை செய்தனா்.
தொடா்ந்து, குத்துவிளக்கை அம்மனாக பாவித்து 1008 வேத மந்திங்கள் கூறி திருவிளக்கேற்றி குங்குமம், பூக்களைக் கொண்டு அா்ச்சனை செய்து வழிபட்டனா்.
செல்லமுத்து மாரியம்மன், காளியம்மன், அய்யனாா், கன்னியாகுறிச்சி, பெரியாச்சி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பெண்கள் கும்மியடித்து அம்மனை வழிபட்டனா்.