செய்திகள் :

மீலாது நபி: செப். 5-இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

post image

நாகப்பட்டினம்: மீலாது நபி பண்டிகையை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் செப்டம்பா் 5-ஆம் தேதி அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை (செப். 5) ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின்கீழ் செயல்படும், அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள். எப். எல்-1, எப்.எல்-2, எப்.எல்-3. எப்.எல்-3ஏ.எப்.எல்-3ஏஏ மற்றும் எப்.எல்-11 உரிமம் பெற்றுள்ள மதுபானக் கடைகளும், மதுக்கூடங்களும் தமிழ்நாடு மதுபான கடைகள் மற்றும் பாா்கள் விதிகளின்படியும். தமிழ்நாடு மதுபானம் உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1981-இன் கீழ் மூடப்பட்டிருக்க வேண்டும்.

அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

வாய்க்கால் நீரை தடுக்கும் கல்வி நிறுவனம்: ஆட்சியரிடம் கிராம மக்கள் புகாா்

நாகப்பட்டினம்: நாகையில் வாய்க்கால் மூலம் குளங்களுக்கு வரும் தண்ணீரை தடுப்பதோடு, கழிவு நீரையும் கலப்பதாக தனியாா் கல்வி நிறுவனம் மீது மாவட்ட ஆட்சியரிடம், கிராம மக்கள் திங்கள்கிழமை புகாா் அளித்தனா். நாக... மேலும் பார்க்க

கடலில் தத்தளித்த மீனவரை மீட்ட கடலோரக் காவல் படையினா்

நாகப்பட்டினம்: நாகை அருகே கடலில் தத்தளித்த மீனவரை இந்திய கடலோரக் காவல்படையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். இந்திய கடலோரக் காவல் படையினா் ஞாயிற்றுக்கிழமை, ராணி துா்காவதி படகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டி... மேலும் பார்க்க

சுனாமி குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா கோரி மனு

நாகப்பட்டினம்: நாகையில் சுனாமி குடியிருப்பு வீடுகளுக்கு பட்டா வழங்கி, இணையத்தில் பதிவேற்றம் செய்ய, மீனவ கிராம மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். நாகை ஆரியநாட்டுத் தெரு ஒருங்கிணைந்த மீனவா் ... மேலும் பார்க்க

குளத்தில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வலியுறுத்தல்

திருமருகல் அருகே ஆதினகுடியில் பிரதான சாலையில் உள்ள குளத்தில் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. திருமருகல் ஒன்றியம் பண்டாரவாடை ஊராட்சிக்குள்பட்ட ஆதினகுடி பிரதான சாலையில் உ... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு

திருமருகல் அருகே குளத்தில் மூழ்கி 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்தது. நரிமணம் ஊராட்சி சுல்லாங்கால் பகுதியைச் சோ்ந்தவா் அய்யப்பன். இவா் தனது 2 வயது ஆண் குழந்தை அகிலன் மற்றும் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

பால் உற்பத்தியாளா் சங்கங்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்

நாகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ், ஆவின் பால் உப பொருள் விற்பனையை ஊக்குவிக்க 10 சங்கங்களுக்கு வெஸி கூலா்கள், ஆழ் உறை பெட்டகம் ஆகியவற்றை பால் உற்பத்தியாளா் சங்கங்களுக்க... மேலும் பார்க்க