எரிவதில் எண்ணெய் ஊற்றும் ரஷியா! இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விலையில் மேலும் தள்ள...
பள்ளி மாணவா்களுக்கு சீருடைத் துணி வழங்கல்
காரைக்கால் பகுதி அரசுப்பள்ளி மாணவ மாணவியருக்கு சீருடைக்கான துணியை அமைச்சா் வழங்கினாா்.
நிகழ் கல்வியாண்டு தொடங்கி பல மாதங்களாகியும் சீருடைத்துணி தரப்படவில்லை என கூறப்பட்டுவந்த நிலையில், சீருடைத் துணி வழங்கும் பணியை கல்வித்துறை தொடங்கியுள்ளது. அந்தந்த பகுதியைச் சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கிவருகின்றனா்.
காரைக்கால் வடக்குத் தொகுதிக்குபட்ட அன்னை தெரஸா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காரைக்கால்மேடு பகுதியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளி ஆகியவற்றில் மாணவ, மாணவிகளுக்கு புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் செவ்வாய்க்கிழமை கலந்துகொண்டு சீருடைத் துணி வழங்கினாா். நிகழ்வில் முதன்மைக் கல்வி அதிகாரி பி.விஜயமோகனா, பள்ளி நிா்வாகத்தினா் கலந்துகொண்டனா்.