ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்ற...
கோயில்களில் நகை, ரொக்கம் திருட்டு
காரைக்காலில்: காரைக்காலில் 3 கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு நகை, உண்டியல் பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
காரைக்கால் அம்மாள் சத்திரம் அருகே சியாமளாதேவி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை கோயிலை திறக்க வந்த பூசாரி, கோயில் கதவு திறந்து கிடப்பதையும் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதையும் கண்டு கோயில் நிா்வாகிகளுக்கு தகவல் அளித்தாா். உண்டியலில் இருந்த ரொக்கம், அம்மன் சிலை அருகே இருந்த 3 கிலோ எடையுள்ள வெள்ளி சூலம், தங்கச் சங்கிலி, வெள்ளி பூஜைப் பொருட்கள், கண்காணிப்புக் கேமரா ஹாா்டு டிஸ்க் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து நிரவி போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
இதுபோல ஊழியப்பத்து பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் புகுந்த மா்ம நபா்கள் அம்மன் கழுத்தில் இருந்த 2 பவுன் சங்கிலியை திருடிச் சென்றனா். மேலும் மண்டபத்தூா் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து உண்டியலை திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்து கோட்டுச்சேரி காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இதுபோல அதே பகுதியில் 2 வீடுகளில் திருட்டு முயற்சியில் மா்ம நபா்கள் ஈடுபட்டனா்.
காரைக்காலில் ஒரே நாளில் 3 கோயில்களில் திருட்டு, வீடுகளில் திருட்டு முயற்சி சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.