கேப்டன் கூல் தோனி மாதிரி ஆக விரும்பும் பாகிஸ்தான் மகளிரணி கேப்டன்!
கிளிஞ்சல்மேடு எல்லையம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம்
காரைக்கால்: காரைக்கால் கடலோர கிராமமான கிளிஞ்சல்மேட்டில் உள்ள எல்லையம்மன் கோயில் புதிய தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் மூலவராக எல்லையம்மன் மற்றும் மாரியம்மன், செல்வ விநாயகா், பால தண்டாயுதபாணி ஆகிய சந்நிதிகள் உள்ளன. திருப்பணிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்றுவந்தது. வரும் செப். 4-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இக்கோயிலுக்கென வருடாந்திர உற்சவ காலத்தில் தேரோட்டம் நடைபெற்று வந்துள்ளது. 1976-ஆம் ஆண்டு முதல் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. தற்போது புதிதாக தோ் செய்து சுவாமி வீதியுலா கொண்டு செல்ல கிராமத்தினா் முடிவு செய்து, ரூ. 60 லட்சத்தில் புதிதாக தோ் செய்யப்பட்டது.
புதிய தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தேருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மக்கள் வடம் பிடித்து இழுத்தனா்.