Stray Dogs Issue: `தெரு நாய்களை ஒழித்தால் நோய் வரும்...' - சீமான்
உலகின் மிகப்பெரிய அரண்மனை: 500 ஆண்டுகள் தடை செய்யப்பட்ட நகரத்தில் இருக்கும் பேலஸ் பற்றி தெரியுமா?
சீனாவின் புகழ் பெற்ற அரண்மனை
அரண்மனை என்றாலே அதன் பிரமாண்ட கட்டிட அமைப்பும், அதன் அழகான வெளி தோற்றங்களும் பலரையும் ஈர்க்கும்.
அதிலும், சீனாவின் பீஜிங் நகரத்தில் உள்ள "ஏகாதிபத்திய அரண்மனை" (Imperial Palace) தோற்றம் உலகில் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. மிகவும் புகழ் பெற்ற மிகப்பெரிய இந்த அரண்மனை குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.
வரலாற்று மற்றும் கட்டடக்கலையின் தலைசிறந்த படைப்பாக விளங்கும் இந்த அரண்மனை, பல நூற்றாண்டுகளாக மன்னர்களின் தனிப்பட்ட உலகமாக இருந்துள்ளது.

இது சாதாரண மக்களுக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது. இன்று, இந்த அரண்மனை பொதுமக்களுக்கு திறந்து விடப்பட்டு, பார்வையாளர்கள் அதன் பிரமாண்டமான மண்டபங்களை ஆராய முடியும் என கூறப்படுகிறது.
1406 முதல் 1420 வரை மிங் மன்னர் யோங்லேவின் ஆட்சியில் பீஜிங்கில் நகரம் உருவாக்கப்பட்டது. இந்த நகரமும் தடைசெய்யப்பட்ட நகரமாக இருந்துள்ளது.
இந்த அரண்மனை சீன அரசவையின் வலிமையையும் அதிகாரத்தையும் குறிப்பதாகவும், லட்ச கணக்கான தொழிலாளர்கள் இதன் கட்டுமானத்தில் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த அரண்மனைக்குள் நுழைய சாதாரண மக்களுக்கு தடை செய்யப்பட்டிருந்தது. மன்னர், அவரது குடும்பம், நம்பகமான அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மட்டுமே இதற்குள் வாழ்ந்தனர்.
அவர்களும் குறிப்பிட்ட பகுதிகளுக்குதான் அனுமதிக்கப்பட்டனர். மன்னருக்கு மட்டுமே முழு அரண்மனையையும் அணுக வாய்ப்பு இருந்தது.

மற்றவர்கள் முன்னரே நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளுக்குள் மட்டுமே வர முடியும். அத்துமீறி நுழைந்தவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இப்போது இந்த அரண்மனை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. 1925-ல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்ட இதில் அரசப் பொருள்களின் தொகுப்புகள் உள்ளன. தடை செய்யப்பட்ட இந்த நகரம் 2020-ல், தனது 600-வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!