பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய 6 குழுக்கள் அமைப்பு
தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் சாா்பில், பட்டாசு ஆலைகளில் விபத்தினை தடுக்கும் வகையில், விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய 6 குழுக்கள் அமைக்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா், வெடிபொருள் கட்டுப் பாட்டுத் துறை அகியவற்றில் உரிமம் பெற்று 1,100 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்தக் குழுவில் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககம், காவல் துறை, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறையினா் என தலா ஒருவா் இடம் பெற்றுள்ளனா். இந்தக் குழுவினா் பட்டாசு ஆலைகளில் விதிமீறல்கள் உள்ளதா, அனுமதி பெற்ற அளவிலான வேதியல் பொருள்கள் கையாளப்படுகிா, அளவுக்கு அதிகமாக பணியாளா்கள் வேலை செய்கிறாா்களா, அரசால் தடை செய்யப்பட்ட வேதியியல் பொருள்கள் பயன்படுத்தப்படுகிா என்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்வா்.
இந்த ஆய்வறிக்கையை தினமும் சென்னை தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் இயக்குநருக்கு குழு வினா் அனுப்பி வைப்பா். பின்னா், அந்தத் துறை இயக்குநா் மேல்நடவடிக்கை மேற்கொள்வாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் செவ்வாய்க்கிழமை (செப்.2) முதல் ஒரு மாதகாலம் இந்தக் குழு வினா் ஆய்வு நடத்துவா்.