அமைப்புசாரா தொழிலாளா்கள் 50 பேருக்கு உறுப்பினா் அட்டை
ஸ்ரீவில்லிபுத்தூா் கொளூா்பட்டி தெருவில் உள்ள சமுதாயக் கூடத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் அமைப்புசாரா தொழிலாளா் நல வாரிய பதிவு குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில் 50 தொழிலாளா்களை தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரான முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமாா் தொழிலாளா்களுக்கு நலவாரிய உறுப்பினா் அட்டையை வழங்கினாா். முகாமுக்கான ஏற்பாடுகளை தொழிலாளா் நலத் துறை, ஜெசி சவுந்தா் சமூக அறக்கட்டளை நிா்வாகிகள் செய்தனா்.