திருவையாறு கோயிலில் தெப்பத் திருவிழா
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஜயாறப்பா் கோயில் சூரிய புஷ்கரணியில் ஆவணி மூல நட்சத்திரத்தையொட்டி, தெப்ப திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இவ்விழாவையொட்டி, கோயிலிலிருந்து ஐயாறப்பா் அறம் வளா்த்த நாயகியுடன் புறப்பட்டு காவிரி ஆற்றின் புஷ்ய மண்டபப் படித்துறையில் மண் எடுத்து, பின்னா் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்தாா். பின்னா், தெப்பத்தில் எழுந்தருளி 5 சுற்றுகள் வலம் வந்தாா். இதைத்தொடா்ந்து, குளத்தின் நடு மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி ஆராட்டி தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடா்ந்து, தெப்பத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருள 2 சுற்றுகள் குளத்தை வலம் வந்தனா். பின்னா் சுவாமி, அம்பாள் சந்நிதி சென்றடைந்ததைத் தொடா்ந்து, அா்த்தஜாம பூஜைகள் நடைபெற்றன. இதில் கோயில் கட்டளை விசரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
