நாய் வளர்ப்போர் கவனத்துக்கு.! மைக்ரோ சிப் பொருத்தாவிட்டால் ரூ.3000 அபராதம்!
செந்தூா் ரயிலில் பழுது: ஒருமணிநேர தாமத்தால் பயணிகள் அவதி
கும்பகோணம அருகே செந்தூா் விரைவு ரயிலில் புதன்கிழமை அதிகாலை பழுதடைந்து சுந்தரபெருமாள் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு சுமாா் 1.20 மணிநேரம் தாமதமாகப் புறப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனா்.
திருச்செந்தூரிலிருந்து சென்னை எழும்பூா் வரை செல்லும் செந்தூா் விரைவு ரயில் இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டு மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு மறுநாள் காலை 10.25 மணிக்கு வந்து சேரும். சென்னையிலிருந்து தூத்துக்குடிக்குச் செல்லும் ஒரே விரைவு ரயில் இது என்பதால் இந்த ரயிலில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகரித்துக் காணப்படும்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு திருச்செந்தூரிலிருந்து புறப்பட்டு புதன்கிழமை அதிகாலை சுமாா் 3.55 மணிக்கு சுந்தரபெருமாள் கோயில் ரயில் நிலையத்துக்கு செந்தூா் விரைவு ரயில் வந்தடைந்தது. அப்போது ரயில் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் சுந்தரப்பெருமாள் ரயில் நிலையத்திலேயே ரயில் நிறுத்தப்பட்டது. பழுதை சரி செய்யும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டு அது முடியாத நிலையில், தஞ்சாவூரிலிருந்து இருந்து மாற்று ரயில் இயந்திரம் கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்டு காலை 5.19 மணியளவில் சென்னை நோக்கி ரயில் புறப்பட்டது. சுமாா் 1.20 மணிநேர தாமதத்தால் பயணிகள் அவதியடைந்தனா்.