பீலிக்கான் முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்: திரளானோர் பங்கேற்பு!
Udhayanidhi: "என் தலையைச் சீவிக்கொண்டு வந்தால் 10 லட்சம் தருகிறேன் என்றார்கள்"- உதயநிதி ஸ்டாலின்
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நாட்டு நலப் பணித்திட்ட அமைப்பு சார்பில் 'சமூக ஊடகச் சவால்களை எதிர்கொள்வது' குறித்து மூன்று நாள் மாநில அளவிலான பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியிருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சமூக வலைத்தளங்களில் இன்றயை தினம் அதிகம் பொய் செய்திகளும் வதந்திகளும் பரப்பி வருகிறார்கள். உண்மை எவ்வளவு வேகமாகச் செல்கிறதோ பொய் செய்தி மூன்று மடங்கு வேகமாகச் செல்கிறது.
இந்தியாவில் உள்ள பாசிச கும்பல் பொய் செய்திகளைப் பரப்புவதை அடிப்படை கொள்கையாகக் கொண்டு முழு நேர வேலையாகச் செய்து கொண்டு உள்ளனர்.

பொய் செய்தி மூலம் மக்களைக் குழப்ப வேண்டும், அவர்களை மழுங்கடிக்க வேண்டும் அதனை நோக்கமாக வைத்து கட்டுக்கதைகளைப் பரப்பி வருகிறார்கள்.
வதந்திகளில் இரண்டு வகை உண்டு. மிஸ் இன்ஃபர்மேஷன் மற்றும் டிஸ் இன்ஃபர்மேஷன் ஆகும். மிஸ் இன்ஃபர்மேஷன் என்பது எந்தவித உள் நோக்கமும் இல்லாமல் பரவுகின்ற செய்திகள். ஆனால் டிஸ் இன்ஃபர்மேஷன் என்பது திட்டமிட்டு ஒரு உள்நோக்கத்தோடு பரப்பப்படுகின்ற அந்தப் பொய் செய்தி. டிஸ் இன்ஃபர்மேஷன் விட டிசைன் ஃபார்மேஷன் மிக மிக ஆபத்தானது.
எனது தலையைச் சீவுபவர்களுக்கு 10 லட்சம் தருகிறேன் என்றார்கள்
மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகப் பிறப்பால் யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் கிடையாது பிறப்பால் ஏற்றத்தாழ்வு கிடையாது அப்படி ஒன்று இருந்ததால் அதனை ஒழிக்க வேண்டும் என நான் பேசினேன்.
அதையும் திரித்து இனப்படுகொலை தூண்டுவதாக என்மேல் பொய் செய்தி பரப்பினார்கள். என் பேச்சைத் திரித்து நான் சொல்லாத விஷயத்தைக் கூறி ஒரு கும்பல் நாடு முழுவதும் வதந்தியைப் பரப்பினார்கள்.

இந்த விவகாரத்தில் எனது தலையைச் சீவுபவர்களுக்கு 10 லட்சம் தருகிறேன் என ஒரு சாமியார் கூறினார். இன்னொரு சாமியார் போட்டிப் போட்டுக் கொண்டு உதயநிதி தலையைச் சீவுபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என எனது தலைக்கு விலை பேசினார்கள்.
மேலும் உடனே மன்னிப்பு கோரச் சொன்னார்கள். மன்னிப்பு கூற மாட்டேன் யாரை வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளுங்கள் எந்த நீதிமன்றம் வேண்டுமானாலும் சென்றுகொள்ளுங்கள் நான் அதனைச் சந்திக்கத் தயாராக உள்ளேன் எனவும் நான் பேசியது தவறு இல்லை எனவும் தெரிவித்தேன்.

பெரியார் வழியில் வதந்தி செய்திகளை எதிர்கொள்வோம்
பெரியார் பொய்யான விஷயத்தை யார் கூறினாலும், நானே கூறினாலும் நம்ப வேண்டாம் எனக் கூறிய ஒரே தலைவர் பெரியார் தான். உனது பகுத்தறிவுக்கும் புத்திக்கும் எது சரிப்படுகிறதோ அதை மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஏன் எதற்கு என்று எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் எனப் பெரியார் கூறியுள்ளார்" என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs