செய்திகள் :

"திரையரங்குகளில் டிக்கெட் வழங்கும் முறையை அரசே கணினி மயமாக்க வேண்டும்"-தயாரிப்பாளர்கள் சங்கம்

post image

சமீபத்தில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் திரையரங்குகளில் டிக்கெட் வழங்கும் முறையை அரசே கணினி மயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூக வலைதளங்களில் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு முக்கிய திரையரங்கில் 'ONLINE TICKET' விற்பனை கணக்கு வழக்குகளை, சம்பந்தப்பட்ட திரையரங்கினர், மறைத்து, அவர்கள் வேறு ஒரு கணக்கினை தவறாக காட்டியிருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின்

இது சம்பந்தமாக விசாரணை செய்ததில் பல்வேறு திரைப்படங்களுக்கும் இதேபோல் கணக்கு வழக்குகளை மாற்றி தவறான தகவல்களை மட்டுமே அளித்துள்ளார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இது போன்று தவறுகள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அனைத்து திரையரங்குகளிலும் 'TICKET' வழங்கும் முறையை தமிழ்நாடு அரசே கணினி மயமாக்க வேண்டும் என்று கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கவனத்திற்கு கொண்டு சென்று 'ONLINE TICKET CENTRALISED SERVER' அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம்.

திரையரங்கு

அதே கோரிக்கையை மீண்டும் மாண்புமிகு. தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களிடத்தில் நேரில் சென்று வலியுறுத்தி உடனடியாக அமல்படுத்த வேண்டுகோள் வைக்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு உரிய நிவாரணத்தை அந்த திரையரங்கினரிடம் இருந்து பெற்று தர வழிவகை செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு TET தேர்வு: "முதல்வர் நல்ல முடிவை எடுப்பார்" - சபாநாயகர் அப்பாவு

'ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்' எனச் செப்டம்பர் 1ம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மேலும், 'அவ்... மேலும் பார்க்க

சென்னை: வடிகால் தொட்டியில் விழுந்த பெண்; சடலமாக மீட்ட காவல்துறை - என்ன நடந்தது?

சென்னை, அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி, வீரபத்திரன் கோயில் தெருவில் உள்ள ஒரு வண்டல் சேகரிப்பு தொட்டியில் (silt catch pit) பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று காலை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.... மேலும் பார்க்க

தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த பச்சிளம் குழந்தைகளைக் கடித்த எலி; ம.பி., அரசு மருத்துவமனையில் அவலம்

மத்தியப் பிரதேச மாநிலத்தின் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்த இரண்டு பச்சிளம் குழந்தைகளை எலி கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்த அவலமானது இந்தூரில் உள்ள மாந... மேலும் பார்க்க

"விடுவிக்கப்படும் வரை சிறையிலிருப்பதே நல்லது" - எதிர்க்கும் அரசு; உமர் காலித் ஜாமீன் மனு தள்ளுபடி!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கெதிராக 2020 பிப்ரவரியில் டெல்லியில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்தது.இதில், 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.பின்னர், இந்தக் ... மேலும் பார்க்க

நெல்லை: "பேருந்து நின்றால்தானே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும்?" - வேதனையில் கல்லூரி மாணவிகள்

பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தை தேர்தல் பிரசாரங்களில் முதன்மைப்படுத்தத் திட்டமிடுகிறது தி.மு.க. ஆனால் 'பேருந்து நின்றால்தானே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும்' என வருந்துகிறார்கள் நெல்லை கல்... மேலும் பார்க்க

``கச்சத்தீவு எங்கள் பூமி; யாரும் அதிகாரம் கொள்ள முடியாது'' - இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயகே

கச்சத்தீவுபாம்பன் (ராமேஸ்வரம் அருகே) கடல்சருகில் இருந்து சுமார் 10 மைல் தூரத்தில், இலங்கை நாட்டின் ஜாஃப்னா மாவட்டத்துக்கு அருகில் உள்ளது கச்சத்தீவு.இந்தியா சுதந்திரம் பெற்றபின், இத்தீவு குறித்த உரிமை ... மேலும் பார்க்க