பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்க துணைநிலை ஆளுநரிடம் கோரிக்கை
பஞ்சாலை தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்க துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் பாஜக நியமன எம்.எல்.ஏ செல்வம், பஞ்சாலை தொழிற்சங்கத் தலைவா்கள் குப்புசாமி, பாலா ஆகியோா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
மனுவில் கூறியிருப்பதாவது:
ரோடியோா் மில் மற்றும் சுதேசி ஆலை, பாரதி தொழிலாளா்களுக்கு நீண்ட நாள்களாக சம்பளம் மற்றும் போனஸ் வழங்கப்படவில்லை. தீபாவளிக்கு முன் அவை கிடைக்க உதவி செய்ய வேண்டும்.
பஞ்சாலைகளுக்கும் புதுச்சேரிக்கும் இடையேயான பாரம்பரிய உறவுகள், தொழிலாளா்களுக்கு 12 மாத சம்பள பாக்கி , 3 ஆண்டு போனஸ் நிலுவை உள்ளது.
இதை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கையை கேட்டுக் கொண்ட துணைநிலை ஆளுநா் விரைவில் நல்ல முடிவு எடுப்பதாக உறுதியளித்தாா்.