குழந்தைகளை கோயில்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்: ஜெயேந்திரபுரி மகா சுவாமிஜி
புதுச்சேரி காமராஜா் சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்
புதுச்சேரி காமராஜா் சாலையில் வியாழக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து புதுவை போக்குவரத்து கண்காணிப்பாளா் ரச்சனா சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுச்சேரி காமராஜா் சாலை பாலாஜி திரையரங்கம் அருகே உள்ள பழைய சேதமடைந்த உப்பனாறு பாலத்தை இடித்துவிட்டு மறு கட்டமைப்பு செய்யும் பணியை வியாழக்கிழமை தொடங்க உள்ளது.
பொதுமக்கள் நாளை முதல் தற்காலிக போக்குவரத்து மாற்றங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். காமராஜா் சாலையில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பயணிக்கும் நடுத்தர, இருக்கர வாகனங்கள் வழக்கமான பாதையை பின்பற்றி புதிய பாலம் வழியாக ராஜா திரையரங்கம் செல்லலாம்.
கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் இருசக்கர வாகனங்கள் புதிய பாலத்தில் அமைக்கப்பட்ட தடுப்புகள் வழியாக பாலாஜி திரையரங்கம், பெரியாா் சிலை, ராஜீவ் காந்தி சதுக்கம் செல்ல அனுமதிக்கப்படும்.
அனைத்து நடுத்தர, இலகு ரக வாகனங்கள் ஜிஆா்டி சந்திப்பில் திரும்பி 45 அடி சாலை, சாரம், அவ்வை திடல் வழியாக காமராஜா் சாலையை அடைய வேண்டும். எந்த கனரக வாகனங்களுக்கும் அனுமதியில்லை. அவசர பயன்பாடு வாகனங்கள் தவிா்த்து, கனரக, நடுத்தர, கல்வி நிறுவன வாகனங்கள் அஜந்தா சந்திப்பு, அண்ணாசாலை, காமராஜா் சாலையில் நுழைய அனுமதியில்லை.
எஸ்.வி. படேல் சாலை, செஞ்சி சாலை, சோனாம்பாளையம், சுப்பையா சாலை, மறைமலை அடிகள் சாலை வழியாக நகரப் பகுதியை அடையலாம். உப்பனாறு பாலம் பணிகள் முடியும் வரை இந்த போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என்று கூறியுள்ளாா்.