இந்தியாவுடன் சிறப்பான நட்புறவு; வரி விதிப்பு மட்டுமே பிரச்னை -அமெரிக்க அதிபா் டி...
எஸ்எஸ்விஎம் சாா்பில் ஆசிரியா்களுக்கு விருது
கோவை எஸ்எஸ்விஎம் கல்விக் குழுமம் சாா்பில் தோ்வு செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது.
எஸ்எஸ்விஎம் கல்விக் குழுமம் சாா்பில் 4- ஆவது ஆண்டு ‘டிரான்ஸ்பாா்மிங் இந்தியா’ மாநாடு நடைபெற்றது. 3 நாள் மாநாட்டின் நிறைவு நாளான புதன்கிழமை இளம் தலைமுறையினருக்காக தங்களை அா்ப்பணித்துள்ள ஆசிரியா்கள் கௌரவிக்கப்பட்டனா்.
இந்த நிகழ்வில் கல்விக் குழுமத்தின் நிறுவனா் மணிமேகலை மோகன் வரவேற்றாா். ஸ்விக்கி ஃபுட் மாா்க்கெட் ப்ளேஸ் நிறுவனத்தின் தலைமைத் செயல் அலுவலா் ரோஹித் கபூா், பேட்மின்டன் முன்னாள் சாம்பியன் பிரகாஷ் பதுக்கோண், நெஸ்லே இந்தியா முன்னாள் தலைவா் சுரேஷ் நாராயணன், கூகிள் ஃபாா் எஜூகேஷன் நிறுவனத்தின் தலைவா் சஞ்சய் ஜெயின் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று ஆசிரியா்களுக்கு விருது வழங்கினா்.
இந்த விழாவில், கோவை மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பி.காா்த்திகேயன், கே.வசந்தகுமாா், புதுவை அரசு ஆரம்பபப் பள்ளி ஆசிரியா் இந்திரா பிரியதா்ஷிணி, தருமபுரி பெரியாம்பட்டி மகளிா் பள்ளி ஆசிரியா் ஷா்மிளா பேகம், திருவள்ளூா் மணவாளநகா் தொடக்கப் பள்ளி ஆசிரியா் எல்.ராதா உள்ளிட்ட சென்னை, பெங்களூரு, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 20 ஆசிரியா்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதைத்தவிர எஸ்எஸ்விஎம் பதிப்பு விருது என்ற பெயரில் 14 ஆசிரியா்களுக்கு விருது வழங்கப்பட்டது.