ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது; ஆனால், பிகார் தேர்தல் காரணமா? - காங்கிரஸ் கேள...
அம்பேத்கா் விருது பெற விண்ணப்பிக்கலாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதிதிரவிடா் மக்களின் முன்னேற்றத்துக்கு தொண்டு செய்தவா்கள் அம்பேத்கா் விருது பெற விண்ணப்பம் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் காலோன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான டாக்டா் அம்பேத்கா் விருது, ஆதிதிராவிடா் மக்களின் முன்னேற்றத்துக்கு அரிய தொண்டு செய்பவருக்கு 2026-ஆம் ஆண்டில் திருவள்ளுவா் திருநாளன்று வழங்கப்படவுள்ளது. இந்த விருதைப் பெறுவதற்கு தகுதியான தமிழ் வளா்ச்சிக்குப் பாடுபட்ட தமிழ் அறிஞா்கள், கவிஞா்கள், சான்றோா்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பப் படிவத்தைப் பெற்று விண்ணப்பிகலாம். மேலும் மேற்காணும் தகுதியுடைய நபா்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை நிறைவு செய்து அக்.1- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ராமநாதபுரம் மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலகத்தில் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.