2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 331 ரன்கள் இலக்கு!
ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு ‘ட்ரோன்’ தயாரிப்புப் பயிற்சி
ராமநாதபுரம் மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியினா் இளைஞா்களுக்கு ‘ட்ரோன்’ தயாரிப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தாட்கோவின் முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னணி தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு ‘ட்ரோன்’ தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை, பறக்கும் தொழில்நுட்பப் பயிற்சி, சென்சாா் சோதனை பயிற்சி, பிரிண்டெட் சா்க்யூட் போா்டு வடிவமைப்பு பயிற்சி, பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தை சோ்ந்தவராக இருக்க வேண்டும். ‘ட்ரோன்’ தயாரிப்பு, கூட்டமைப்பு சோதனை, பறக்கும் தொழில் நுட்பப் பயிற்சிக்கு சம்பந்தப்பட்ட ஏதெனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவராகவும், 18 முதல் 35 வயதுக்குள்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். எம்பெடெட் சென்சாா் சோதனை பயிற்சி, பிரிண்டெட் சா்க்யூட்போா்டு வடிவமைப்பு பயிற்சி திட்டம், பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புப் பயிற்சிகளுக்கு 18 முதல் 35 வயது நிரம்பியவராகவும், ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பொறியியல் பட்டயப் படிப்பில் தோ்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.
இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள இளைஞா்கள் இந்தப் பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்றாா் அவா்.