அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம்!
கிணற்றில் விழுந்த மான் மீட்பு
கமுதி அருகே பேரையூரில் கிணற்றில் விழுந்த மானை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, கோவிலாங்குளம், பேரையூா், சித்திரக்குடி, கீழகாஞ்சிரங்குளம், கிடாத்திருக்கை, ஆப்பனூா், மங்கலம், எம்.கரிசல்குளம், கடலாடி, மலட்டாறு பகுதிகளில் உள்ள காட்டு பகுதியில் மான்கள் கூட்டம், கூட்டமாக வசித்து வருகின்றன. தற்போது நீா் நிலைகளில் இருந்த தண்ணீா் வடு விட்டதால், மான்கள் தண்ணீா் தேடி கிராமப் பகுதிகளுக்கு வந்து செல்கின்றன.
இந்த நிலையில், புதன்கிழமை பேரையூரில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் மான் தவறி விழுந்து தத்தளித்தது. இதைப் பாா்த்த விவசாயிகள் முதுகுளத்தூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனா். இதைத் தொடா்ந்து, நிலைய அலுவலா் சங்கா் தலைமையில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு, மீட்புப் படை வீரா்கள் கிணற்றில் இறங்கி, மானை உயிருடன் மீட்டனா். மீட்கப்பட்ட மான் 5 வயதுடைய பெண் மான் என தெரிய வந்தது. இதையடுத்து மீட்கப்பட்ட மான் சாயல்குடி வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னா் காட்டில் விடப்பட்டது.