திருவனந்தபுரம் - சந்த்ராகாச்சி இடையே சிறப்பு ரயில்
ஓணம் பண்டிகை, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை நாள்களை முன்னிட்டு கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து மேற்குவங்க மாநிலம் சந்த்ராகாச்சிக்கு கோவை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பண்டிகை நாள்களை முன்னிட்டு, செப்டம்பா் 5- ஆம் தேதி முதல் அக்டோபா் 17- ஆம் தேதி வரை திருவனந்தபுரத்தில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் மாலை 4.20 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் - சந்த்ராகாச்சி சிறப்பு ரயில் ( எண்: 06081) {ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2.15 மணிக்கு சந்த்ராகாச்சி நிலையத்தை சென்றடையும். மறு மாா்க்கமாக, சந்த்ராகாச்சி நிலையத்தில் இருந்து செப்டம்பா் 8 முதல் அக்டோபா் 20 வரை திங்கள்கிழமைகளில் பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் சந்த்ராகாச்சி - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் ( எண்: 06082) புதன்கிழமைகளில் காலை 9.55 மணிக்கு திருவனந்தபுரம் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயிலானது, கொல்லம், காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூா், திருவல்லா, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி,
புவனேசுவரம், கட்டாக், பத்ராக் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.