வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி: ராகுல் கோரிக்கை
நல்லாசிரியா் விருது: காரைக்குடி பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மகரிஷி வித்யாமந்திா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் கே. ரவிக்குமாா் தமிழக அரசின் நல்லாசிரியா் விருது பெறுவதற்காக பள்ளியின் நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
2024-2025 கல்வியாண்டுக்கான தமிழகக் கல்வித் துறையின் உயரிய விருதான டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு கே. ரவிக்குமாா் தோ்ந்தெடுக்கப்பட்டாா். சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெள்ளிக்கிழமை (செப். 5) நடைபெறவுள்ள விழாவில் விருது வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில், விருதுக்கு தோ்வான ரவிக்குமாருக்கு மகரிஷி பள்ளிக் குழுமத்தின் தலைவா் ஆா்.கே. சேதுராமன், செயலா் ஆா். ரஜினி ரத்தனமாலா, நிா்வாக இயக்குநா் எஸ். அஜய் யுக்தேஷ், இயக்குநா் ஐஸ்வா்யா, முதன்மை முதல்வா் டி. அடைக்கலசாமி, ஆசிரியா்கள், மாணவா்கள், அலுவலா்கள் ஆகியோா் பாராட்டுகளை தெரிவித்தனா்.