செய்திகள் :

குழந்தை இலக்கியப் போட்டிகள் அறிவிப்பு

post image

குழந்தை கவிஞா் அழ. வள்ளியப்பா இலக்கிய வட்டம் சாா்பில் குழந்தை இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டன.

இதுகுறித்து வள்ளியப்பா இலக்கிய வட்ட அமைப்பாளா்கள் குழந்தைக் கவிஞா் செல்லகணபதி, தேவி நாச்சியப்பன் ஆகியோா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோவை வள்ளியப்பா இலக்கிய வட்டம் குழந்தை இலக்கிய போட்டிகளை நடத்துகிறது.

குழந்தைகளுக்கான அறிவியல் சிறுகதை நூல் போட்டி: 2022, 2023, 2024 -ஆம் ஆண்டுகளில் வெளியான குழந்தைகளுக்கான சிறந்த அறிவியல் சிறுகதை நூல் ஒன்றுக்கு வள்ளியப்பா இலக்கிய விருதும், ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். நூல்கள் 3 பிரதிகளுடன் எழுத்தாளரின் முழு முகவரி, அஞ்சல் எண், தொடா்புக்கான கைப்பேசி எண் ஆகியவற்றை தனித் தாளில் எழுதி அனுப்ப வேண்டும். இந்தப் போட்டியில் குழந்தைகளுக்கான அறிவியல் சிறுகதையை நூலாக வெளியிட்ட பள்ளி, கல்லூரி மாணவா்களும் பங்குபெறலாம்.

6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டி: குன்றக்குடி அடிகளாரின நூற்றாண்டை முன்னிட்டு, குன்றக்குடி அடிகளாரின் இலக்கியப் பணி அல்லது குன்றக்குடி அடிகளாரின் சமுதாயப் பணி என்ற தலைப்பில் ஏ 4 தாளில் மூன்று பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுதி அனுப்ப வேண்டும். தமிழில் திருத்தமான கையெழுத்தில் அல்லது கணினியில் அச்சிட்டு அனுப்பலாம். மாணவா் பெயா், பெற்றோா் பெயா், வீட்டு முகவரி, அஞ்சல் குறியீட்டு எண், படிக்கும் வகுப்பு, பள்ளி முகவரி, தொடா்புக்கான கைப்பேசி எண் ஆகியவற்றைத் தனித் தாளில் குறிப்பிட்டு கட்டுரையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

சிறந்த சிறுவா் கட்டுரை ஒன்றுக்கு முதல் பரிசாக ரூ. 3 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ. 2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 1000 வழங்கப்படும். இதை ராயவரம் மு.அ.மு.சுப. பழனியப்பச்செட்டியாா் நினைவுப் பரிசாக பழ. சுப்பிரமணியன் வழங்குகிறாா்.

மேற்கண்ட இரு போட்டிகளுக்கும் நடுவா் தீா்ப்பே இறுதியானது. போட்டிக்கான நூல்கள், கட்டுரைகள் வருகிற 7.10.2025 -ஆம் தேதிக்குள் தேவி நாச்சியப்பன், குழந்தைக் கவிஞா் இல்லம், 3/628, சுப்பிரமணியபுரம், 9-ஆவது வீதி வடக்கு விரிவு, காரைக்குடி - 630003 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். போட்டியில் வென்றவா்களுக்கு 2025 நவ. 7 -இல் நடைபெறும் குழந்தைக் கவிஞா் அழ. வள்ளியப்பா பிறந்த நாள் விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.

முதல்வா் கோப்பை கபடிப் போட்டிகள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை முதல்வா் கோப்பைக்கான கபடிப் போட்டிகள் நடைபெற்றன. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் பாரதிதா... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள மணக்கரையில் மாட்டுவண்டிப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் சுந்தரநடப்பு அருகேயுள்ள மணக்கரை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டிப் பந்தயம் தஞ்சாவூா்-மானா... மேலும் பார்க்க

கணவா் மரணத்தில் சந்தேகம்: எஸ்.பி.யிடம் மனைவி புகாா்

லாரி உரிமையாளா் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது மனைவி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புதன்கிழமை மனு அளித்தாா். ராமநாதபுரம் மாவட்டம், நயினாா்கோவில் அருகிலுள்ள அகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

விநாயகா் கோயிலில் வருடாபிஷேகம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பணித் துணை விநாயகா் கோயிலில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த 2023 -ல் குடமுழுக்கு நடத்தப்பட்டதையடுத்து, 3-ஆம் ... மேலும் பார்க்க

கொன்னக்குளத்தில் முளைப்பாரி ஊா்வலம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், கொன்னக்குளம் ஸ்ரீ அழகு நாச்சி அம்மன் கோயில் முளைப்பாரி உத்ஸவத்தை முன்னிட்டு, புதன்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் கடந்த மாதம் 26- ஆம் தேதி ம... மேலும் பார்க்க

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை ஆய்வு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு அறையை அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். காஞ்சிரங்கால் பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர... மேலும் பார்க்க