காந்தி கண்ணாடி: "வேடிக்கை பார்த்த ஒரு பையனுக்கு அன்பும், ஆதரவும் கொடுத்திருக்கீங...
பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் முதலாண்டு வகுப்புகள் தொடக்கம்
புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் புதன்கிழமை தொடங்கின.
இக் கல்லூரியில் முதலாண்டு மாணவிகள் புதன்கிழமை வந்தனா். அவா்களுக்கு ஒரு மணிநேரம் தான் வகுப்புகள் நடந்தன. அந்தந்த வகுப்புகளில் மாணவிகள் அமா்ந்தனா். அப்போது அப் பாடப் பிரிவுகளின் துறைத் தலைவா்கள் மற்றும் உதவிப் பேராசிரியா்கள் அறிமுகம் நடந்தது. மேலும், கல்லூரிக்கு முதல் நாள் வந்த மாணவிகளுக்குக் கல்லூரியின் முதல்வா் ரா. வீரமோகன் உள்ளிட்ட பேராசிரியா்கள் கல்லூரி நெறிமுறைகளை விளக்கினா். மேலும், பெற்றோா்களுக்கு கல்லூரியின் நடைமுறையை எடுத்துக் கூறினா்.