வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிவாரண நிதி: ராகுல் கோரிக்கை
எஸ்பிஐ வங்கி செயலி புதுப்பிப்பதாக கூறி இணைய வழியில் மோசடி: போலீஸாா் எச்சரிக்கை
எஸ்பிஐ வங்கி செயலியை புதுப்பிப்பதாக கூறி மோசடி நடப்பதாக புதுச்சேரி இணையவழி போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
காவல் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு
வாட்ஸ் ஆப் குழுக்களிலோ அல்லது தெரியாத நபா்களிடமிருந்தோ வட்டார போக்குவரத்து அதிகாரி பெயரில் இ செலான் எனும் போக்குவரத்து விதிமீறல் அபராதம் செலுத்த லிங்க் அனுப்பப்படுகிறது. அதைத் தொட்டாலோ அல்லது உள்ளே சென்று உங்களது தகவல்களை பதிவிட்டாலோ உங்களது பணத்தினை இழக்க நேரிடும்.
அதேபோல எஸ்பிஐ வங்கியின் யோனோ செயலி ஆதாா் எண் தவறால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்க் மூலம் புதுப்பிக்கலாம் என அனுப்பப்படுகிறது. அந்த லிங்கை தொட்டால் உங்கள் கணக்கில் உள்ள பணம் மோடி கும்பலால் கபளீகரம் செய்யப்படும்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பலரும் பணத்தை இழந்துள்ளனா். எனவே, புதுவை பொதுமக்கள் யாரும் இத்தகைய 2 லிங்குகளையும் தொட வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.