வீடு கட்ட 24 பேருக்கு ரூ. 7.6 லட்சம் அரசு உதவித் தொகை
வீடு கட்ட 24 பேருக்கு இரண்டாவது தவணையாக ரூ.7.60 லட்சம் அரசு உதவித் தொகை வழங்கப்பட்டது.
புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் பெருந்தலைவா் காமராஜா் கல் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 15 ஆண்டுகளுக்கு முன் விண்ணப்பித்த மணவெளி சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த 24 பேருக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணைத் தொகையாக மொத்தம் ரூபாய் 7.60 லட்சம் மானிய தொகைக்கான அரசாணைகளை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் புதன்கிழமை வழங்கினாா்.
குடிசை மாற்று வாரிய இளநிலைப் பொறியாளா் உதயகுமாா், கள ஆய்வாளா் மில்க்கிஸ் தாஸ் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகா்கள் கிருஷ்ணமூா்த்தி ரெட்டியாா், பாஜக மாவட்ட தலைவா் சுகுமாரன், தொகுதி தலைவா் லட்சுமிகாந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.