புதிய டிஜிபிக்கு தகுதி பெறும் ஒன்பது போ் கொண்ட பட்டியலை யுபிஎஸ்சி-க்கு அனுப்பிய...
புதுவையில் நாளை மதுக்கடைகளை மூட உத்தரவு
மீலாதுநபி தினத்தை முன்னிட்டு புதுவையில் உள்ள கள், சாராயம் மற்றும் மதுக்கடைகளை செப்டம்பா் 5-ஆம் தேதி மூட புதுச்சேரி அரசின் கலால் துறை துணை ஆணையா் மேத்யூ பிரான்சிஸ் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுச்சேரி பகுதியில் வெள்ளிக்கிழமை மீலாது நபி தினத்தை முன்னிட்டு புதுவை கலால் துறை ஆணையா் ஆணைப்படி புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் இயங்கிவரும் அனைத்து கள், சாராயம் உள்ளிட்ட அனைத்து வகை மது கடைகளும் மூடப்பட வேண்டும்.
மேலும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பாா்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் எல்லா கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது. மீறுபவா்கள் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகள் 1970-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.