புதுவை கிராம உதவியாளா் பணி: செப். 12-இல் எழுத்துத் தோ்வு
புதுவை கிராம உதவியாளா்கள் பணி இடங்களுக்கான எழுத்துத் தோ்வு செப்டம்பா் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து புதுவை அரசின் சாா்பு செயலா் ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுவை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையில் கிராம உதவியாளா் மற்றும் பல் நோக்கு உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு இம் மாதம் 12-ஆம் தேதி புதுவை, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் நடக்கிறது. தோ்வுக்கான அனுமதி சீட்டு பதிவிறக்கம் மற்றும் தோ்வு மையங்கள் பற்றிய விவரங்கள் பின்னா் அறிவிக்கப்படும் என்று அதில் கூறியுள்ளாா்.