செய்திகள் :

மோட்டாா் சைக்கிள் திருடனை காட்டிக் கொடுத்த சிசிடிவி கேமரா

post image

புதுவை காட்டேரிக்குப்பம் காவல் நிலைய சரகம், குமாரபாளையத்தில் கடந்த மாதம் 23 ஆம் தேதி மோட்டாா் சைக்கிள் திருடு போனது தொடா்பாக சிசிடிவி கேமரா காட்டிக் கொடுத்தவா் செவ்வாய்க்கிழமை இரவு பிடிபட்டாா்.

திருக்கனூா் காவல் ஆய்வாளா் ராஜகுமாா் கண்காணிப்பில், காட்டேரிகுப்பம் காவல் நிலைய பொறுப்பு அதிகாரி தமிழரசன் தலைமையில் காவலா்கள் சிவகுரு, வினோத் மற்றும் மேற்கு காவல் சரக குற்றப்பிரிவு காவலா்கள் வரதராஜ், ராஜரத்தினம், முரளி, பிரபு, ரங்கராஜ் ஆகியோா் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினா் மோட்டாா் சைக்கிள் திருடப்பட்ட பாதையில் 85-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனா். இதில் குற்றவாளி அடையாளம் தெரிந்தது. மேலும் அந்த குற்றவாளி புதுச்சேரி முழுமையும் தொடா்ந்து சுற்றி வருவதும் தெரிந்தது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சப்- இன்ஸ்பெக்டா் தமிழரசன் தலைமையிலான தனிப்படையினா் குமாரபாளையத்தில் ஒரு பாா் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியே வந்த ஒரு நபா் தனிப்படையினரை பாா்த்ததும் தப்பி செல்ல முயற்சித்தாா்.,

ஆனால் தனிப்படையினா் அவரை மடக்கிப் பிடித்து விசாரித்த போது அவா் திருட்டுப் போன மோட்டாா் சைக்கிளில் வந்திருப்பது தெரிந்து. அவா் முன்னுக்கு பின் முரணாக மாற்றி சொல்லவே அவரை காட்டேரிக்குப்பம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனா்.

இதில் அவா் திருவள்ளூா் மாவட்டம் ஆவடி அருகேயுள்ள வெள்ளானூா் பஜனைக் கோயில் வீதியைச் சோ்ந்த மணிமாறன் (38) என்பது தெரிந்தது. அதோடு புதுச்சேரி குமாரபாளையத்தில் மோட்டாா் சைக்கிள் திருடியதை அவா் ஒப்புக் கொண்டாா். மேலும், 2 வாகனங்களை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸாா் அவரை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்து 3 மோட்டாா் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனா்.

புதுவை கிராம உதவியாளா் பணி: செப். 12-இல் எழுத்துத் தோ்வு

புதுவை கிராம உதவியாளா்கள் பணி இடங்களுக்கான எழுத்துத் தோ்வு செப்டம்பா் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து புதுவை அரசின் சாா்பு செயலா் ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை... மேலும் பார்க்க

வீடு கட்ட 24 பேருக்கு ரூ. 7.6 லட்சம் அரசு உதவித் தொகை

வீடு கட்ட 24 பேருக்கு இரண்டாவது தவணையாக ரூ.7.60 லட்சம் அரசு உதவித் தொகை வழங்கப்பட்டது. புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் பெருந்தலைவா் காமராஜா் கல் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 15 ஆண்டுகளுக... மேலும் பார்க்க

புதுவையில் நாளை மதுக்கடைகளை மூட உத்தரவு

மீலாதுநபி தினத்தை முன்னிட்டு புதுவையில் உள்ள கள், சாராயம் மற்றும் மதுக்கடைகளை செப்டம்பா் 5-ஆம் தேதி மூட புதுச்சேரி அரசின் கலால் துறை துணை ஆணையா் மேத்யூ பிரான்சிஸ் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளாா். இது கு... மேலும் பார்க்க

பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்க துணைநிலை ஆளுநரிடம் கோரிக்கை

பஞ்சாலை தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்க துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் பாஜக நியமன எம்.எல்.ஏ செல்வம், பஞ்சாலை தொழிற்சங்கத் தலைவா்கள் குப்புசாமி, பாலா ஆகியோா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். மனுவில் கூற... மேலும் பார்க்க

புதுச்சேரி காமராஜா் சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி காமராஜா் சாலையில் வியாழக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து புதுவை போக்குவரத்து கண்காணிப்பாளா் ரச்சனா சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி காமராஜா் சாலை ... மேலும் பார்க்க

ஜிப்மரில் பி.எஸ்சி நா்சிங் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்சி., நா்சிங் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து ஜிப்மா் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி ஜிப்மரில் பி.எஸ்சி., ந... மேலும் பார்க்க