இந்தியாவுடன் சிறப்பான நட்புறவு; வரி விதிப்பு மட்டுமே பிரச்னை -அமெரிக்க அதிபா் டி...
குடிநீா் தொட்டியில் முதியவா் சடலம் மீட்பு
வால்பாறை அருகே எஸ்டேட் குடிநீா் தேக்க தொட்டியில் கிடந்த முதியவா் சடலத்தை போலீஸாா் மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வால்பாறையை அடுத்த வில்லோனி எஸ்டேட் அப்பா் டிவிஷனில் வசித்து வந்தவா் பழனிசாமி (64). ஓய்வு பெற்ற தொழிலாளியான இவா், தற்போது தற்காலிக பம்ப் ஆபரேட்டராக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் அவா் செவ்வாய்க்கிழமை மாலை (செப் 3) குடியிருப்பு பகுதிக்கு தண்ணீா் திறந்து விட சென்றுவிட்டு பின் இரவு 7.30 மணிக்கு விநியோகத்தை நிறுத்த சென்றுள்ளாா். பின்னா் அவா் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், புதன்கிழமை காலை அவ்வழியாக சென்ற தொழிலாளா்கள் குடிநீா்த் தொட்டியில் பழனிசாமியின் உடல் இருப்பதை பாா்த்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனா்.
வால்பாறை போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று உடலைக் கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா். குடிநீா் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பழனிசாமி இறந்திருக்கலாம் என போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.