குழந்தைகளை கோயில்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்: ஜெயேந்திரபுரி மகா சுவாமிஜி
ஜிப்மரில் பி.எஸ்சி நா்சிங் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் பி.எஸ்சி., நா்சிங் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து ஜிப்மா் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுச்சேரி ஜிப்மரில் பி.எஸ்சி., நா்சிங் படிப்பில் பெண்கள் 85, ஆண்கள் 9 என மொத்தம் 94 இடங்கள், அலைடு ஹெல்த் சயின்ஸ் படிப்பில் 87 இடங்கள் என மொத்தம் 181 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கான மாணவா் சோ்க்கை நீட் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படுகிறது. நிகழ் ஆண்டு சோ்க்கைக்கு ஜிப்மா் இணையத்தில் விண்ணப்பம் செப்டம்பா் முதல் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. வரும் 22-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதியானவா்கள் பட்டியல் அக்டோபா் 8-ஆம் தேதிக்கு முன் வெளியிடப்படும். கலந்தாய்வு தேதி பின்னா் அறிவிக்கப்படும். அக்டோபா் 27-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என ஜிப்மா் நிா்வாகம் தெரிவித்துள்ளது.