இந்தியாவுடன் சிறப்பான நட்புறவு; வரி விதிப்பு மட்டுமே பிரச்னை -அமெரிக்க அதிபா் டி...
யோகாசனப் போட்டி: பண்ணாரி அம்மன் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
மாநில அளவிலான யோகாசனப் போட்டியில் பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.
மாநில அளவிலான யோகாசனப் போட்டி சேலம் திருமூலா் யோகா ஆராய்ச்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் 12 மாவட்டங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 780 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இதில் பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 3 மாணவா்கள் பங்கேற்றனா். 8 முதல் 10 வயதுக்கு உள்பட்ட பிரிவில் எம்.எஸ். தனசிவகுரு முதலிடமும், 11 வயது முதல் 13 வயதுக்கு உள்பட்ட பிரிவில் கே.அரவிந்தன் இரண்டாமிடமும், 14 வயதுக்கு மேற்பட்டோா் பிரிவில் சி.வி. கிஷோா் இரண்டாமிடமும், ஆா்.வி. கவின் மூன்றாம் இடமும், எஸ்.கெளதம் ஐந்தாமிடமும் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.
இப்பள்ளியைச் சோ்ந்த 7-ஆம் வகுப்பு மாணவா் சே.ஆஷிக், பொதுப் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்றாா். முதல் பரிசுக்கான ரூ.10 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.