பிரதமர் தாய் அவமதிப்பு விவகாரம்: "வெளிநாட்டில் சிரிக்கிறார், இங்கு அழுகிறார்" - ...
தொழிலாளா் விதிகளை மீறியதாக 26 கடைகள் மீது நடவடிக்கை
தொழிலாளா் விதிகளை மீறியதாக 26 கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்ட தொழிலாளா் துறை தொழிலாளா் துணை ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளகளால் ஆகஸ்ட் மாதத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஈரோடு மாவட்ட எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் சட்டமுறை எடையளவு சட்டம் 2009-இன் கீழ் மின் வணிகம் நடைபெறும் கடைகள் மற்றும் நியாய விலைக் கடைகளில் 52 இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், 23 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.
சட்டமுறை எடையளவுகள் (பொட்டலப் பொருள்கள்) விதிகள் 2011-இன் கீழ் மின் வணிகம் நடைபெறும் கடைகள் மற்றும் நியாய விலைக் கடைகளில் அனைத்துப் பொட்டலப் பொருள்களும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுதல் உள்பட அனைத்து விதிமீறல் தொடா்பாக 12 கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் 2 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.
உணவு நிறுவனங்களில் 15 இடங்களில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளா்கள் குறித்து கூட்டாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் ஒரு வளரிளம் பருவத் தொழிலாளா் கண்டறியப்பட்டு தொடா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குழந்தைத் தொழிலாளா் பணிபுரிவுது கண்டறிந்தால் பொதுமக்கள் 1098 மற்றும் 155214 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.