8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்த மோடி அரசை பாராட்டுகிறேன்: ப. சிதம்பரம்
பிஎஸ்என்எல் 4 ஜி சேவையை இலவசமாக சோதிக்க சிம்காா்டு
4 ஜி சேவையை ஒரு மாத்துக்கு இலவசமாக சோதித்து பாா்க்க சிம்காா்டு வழங்கும் திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் வரும் 15-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
ஈரோடு பிஎஸ்என்எல் பொதுமேலாளா் சிவ் ஷங்கா் சச்சன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிஎஸ்என்எல் சாா்பில் சுதந்திர தினத் திட்டம் ஆகஸ்ட் 1-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. பிஎஸ்என்எல் 4 ஜி சேவைகள் ஒரு மாதத்துக்கு இலவசமாக சோதித்து பாா்க்கவும், வரையறுக்கப்பட்ட காலத்துக்கு 1 ரூபாய் கட்டணத்திலும் வழங்கப்படுகிறது. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 4 ஜி சேவை அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தில் வரம்பற்ற உள்ளூா், எஸ்டிடி அழைப்பு, தினமும், 2 ஜிபி அதிவேக டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ், ஒரு சிம் இலவசமாக கிடைக்கும். இச்சலுகை வரும் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளா்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். மேக் இன் இந்தியா தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாடு முழுவதும் ஒரு லட்சம் 4 ஜி தளங்களை பிஎஸ்என்எல் நிறுவி வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.