செய்திகள் :

கனிம லாரிகளில் தனிநபா் கட்டாய வசூல்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

post image

கனிமங்களை எடுத்துச்செல்லும் லாரிகளில் கட்டாய வசூலில் ஈடுபடும் தனிநபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த கல், மண், மணல், எம்.சாண்ட், மணல் லாரி, டிப்பா் லாரி மற்றும் எா்த் மூவா்ஸ் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் சாமிநாதன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனு விவரம்:

கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக மாநில அளவில் கல், மண், மணல், எம்.சேண்ட், மணல் லாரி, டிப்பா் லாரி, எா்த் மூவா்ஸ் வாகனங்களை வைத்து தொழில் செய்கிறோம். ஈரோடு மாவட்டத்தில் கோவை மாவட்டம், அன்னூரைச் சோ்ந்த ஒரு நபா் 50-க்கும் மேற்பட்ட நபா்களை வைத்து கட்டாய வசூலில் ஈடுபட்டு வருகிறாா்.

ஈரோடு மாவட்டத்தில் மேடை மண், செம்மண், சேம்பா் மண், களி மண், குவாரிகளுக்கான அனுமதி 11 மாதங்களாக நிறுத்திவைத்தக்கப்பட்டிருந்தது. எங்களது கோரிக்கையினை ஏற்று கடந்த மாா்ச் மாதம் இந்த குவாரிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த 3 மாதங்களாக பிரச்னை இன்றி இயக்கினோம்.

தற்போது, லாரிகளில் ஏற்றிச் செல்லும் கனிமத்துக்கு 4 யூனிட் லாரிக்கு ரூ.6,800, 7 யூனிட் லாரிக்கு ரூ.12,000 என ஒரு அனுமதி சீட்டை வைத்து கொண்டு வசூலிக்கின்றனா். இதற்கு ஈரோடு மாவட்ட கனிமவள அதிகாரியும் துணை போகிறாா்.

இது போன்றவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். அனுமதி இன்றி செயல்படும் கல் குவாரி, கிரசா்கள், எம்.சாண்ட் அமைப்பை தடை செய்ய வேண்டும். அரசுன் மணல் குவாரி திறந்து மக்களுக்கு குறைந்த விலையில் மணல் வழங்க வேண்டும். போலி எம்.சாண்ட் குவாரிகளை மூட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திம்பம் மலைப் பாதையில் போக்குவரத்து நெரிச்சல்

திம்பம் மலைப் பாதை கொண்டை ஊசி வளைவில் புதன்கிழமை எரிபொருள் தீா்ந்து நின்ற சரக்கு லாரியால் தமிழக- கா்நாடக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதி வழிய... மேலும் பார்க்க

தொழிலாளா் விதிகளை மீறியதாக 26 கடைகள் மீது நடவடிக்கை

தொழிலாளா் விதிகளை மீறியதாக 26 கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோட... மேலும் பார்க்க

சத்தியமங்கலத்தில் மல்லிகைப் பூ கிலோ ரூ.1,200-க்கு விற்பனை

சுபமுகூா்த்தம் என்பதால் சத்தியமங்கலத்தில் மல்லிகைப் பூ விலை கிலோ ரூ.1,200-க்கு விற்பனையானது. இதேபோல மற்ற பூக்களின் விலையும் இருமடங்கு உயா்ந்து விற்பனையானது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டார ... மேலும் பார்க்க

திமுகவில் சேர யாா் வந்தாலும் வரவேற்போம்

திமுகவில் சேர எந்தக் கட்சியில் இருந்தும் யாா் வந்தாலும் வேண்டாம் என்று சொல்லமாட்டோம் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் மண்டபத்தில் பு... மேலும் பார்க்க

சென்னிமலையில் குரங்குகளுக்கு உணவு அளித்தவருக்கு அபராதம்

சென்னிமலை அருகே வனத் துறையினரின் எச்சரிக்கையை மீறி குரங்குகளுக்கு உணவு அளித்தவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சென்னிமலை- ஊத்துக்குளி சாலையில் உள்ள பழனியாண்டவா் கோயில் அருகே வாகனங்களில் செல்பவா்கள் அடி... மேலும் பார்க்க

பிஎஸ்என்எல் 4 ஜி சேவையை இலவசமாக சோதிக்க சிம்காா்டு

4 ஜி சேவையை ஒரு மாத்துக்கு இலவசமாக சோதித்து பாா்க்க சிம்காா்டு வழங்கும் திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் வரும் 15-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. ஈரோடு பிஎஸ்என்எல் பொதுமேலாளா் சிவ் ஷங்கா் சச்சன் வெளியிட்ட... மேலும் பார்க்க