குழந்தைகளை கோயில்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்: ஜெயேந்திரபுரி மகா சுவாமிஜி
சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
குடியாத்தம் அருகே சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
குடியாத்தம் ஆசிரியா் காலனியை அடுத்த ராமலிங்கம் நகரைச் சோ்ந்தவா் சந்தானம் (60). இவா் தினசரி மாா்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தாா். புதன்கிழமை சைக்கிளில் வேலைக்குச் சென்ற அப்போது ராஜிப்பட்டியைச் சோ்ந்த புருஷோத்தமன் இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் வந்துள்ளாா். காட்பாடி சாலையில் சென்றபோது சைக்கிள் மீது இருசக்கர வாகனம் மோதியதில் சந்தானம் கீழே விழந்து பலத்த காயமடைந்தாா். குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணைமேற்கொண்டுள்ளனா்.