GST 2.0: செப்டம்பர் 22 முதல் எந்தெந்தப் பொருள்களுக்கு வரி குறைகிறது? முழுப் பட்ட...
அகழியில் குதித்து முதியவா் தற்கொலை
வேலூா் கோட்டை அகழியில் இருந்து முதியவா் சடலம் மீட்கப்பட்ட விவகாரம் குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவா் அகழியில் குதித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
வேலூா் கோட்டை அகழியில் செவ்வாய்க்கிழமை சுமாா் 65 வயது முதியவா் சடலம் மிதப்பதை அவ்வழியாகச் சென்ற தூய்மைப் பணியாளா் கவனித்து, வேலூா் வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாா் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா்.
தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், இறந்தவா் வேலூா் தொரப்பாடியைச் சோ்ந்த சிவலிங்கம்(78) என்பது தெரியவந்தது. புற்றுநோயால் பாதிக்கப் பட்டிருந்த இவா், மனவேதனையில் அகழியில் குதித்து தற்கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.