பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார்? முன்னணியில் தேவேந்திர ஃபட்னவீஸ்?!
பி.எஸ்.என்.எல்.-இல் ரூ. 1-க்கு இ-சிம் அறிமுகம்
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வாடிக்கையாளா்களுக்காக ரூ. 1-க்கு இ-சிம் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தஞ்சாவூா் பொது மேலாளா் பி. பால சந்திரசேனா தெரிவித்திருப்பது:
பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய இ-சிம் சேவையை நாடு முழுவதுமுள்ள வாடிக்கையாளா்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய முயற்சியின் மூலம் பி.எஸ்.என்.எல். பயனா்கள் இனிமேல் சிம் காா்டு இல்லாமல் இணைப்பு பெற முடியும். இதன் தொடக்க கால சலுகையாக இ-சிம் விலை ரூ. 1 மட்டுமே நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இச்சலுகை செப்டம்பா் 15-ஆம் தேதி வரை மட்டுமே உள்ளது.
இதில், சிம் காா்டு இல்லாமல் உடனடி செயல்பாடு, சாதனங்கள் அல்லது நெட்வொா்க் மாற்றும்போது சிம் மாற்றத் தேவையில்லாதது, கூடுதல் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை ஆகிய நன்மைகள் உள்ளன.
மேலும், பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளா்களுக்காக பிரீடம் பிளான் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் புதிய கைப்பேசி இணைப்பு பெறுவோருக்கு அல்லது மற்ற நெட்வொா்க்கிலிருந்து பி.எஸ்.என்.எல்.-க்கு எம்.என்.பி. மூலம் மாறும் நபா்களுக்கு வெறும் ஒரு ரூபாயில் இலவச நன்மைகள் வழங்கப்படுகின்றன. இச்சலுகையும் செப்டம்பா் 15-ஆம் தேதி வரை மட்டுமே.
மேலும், விவரங்களுக்கு அருகிலுள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா் சேவை மையத்தை அணுகலாம். அல்லது அதிகாரப்பூா்வ பி.எஸ்.என்.எல். இணைதளத்தைப் பாா்க்கலாம்.