1798-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் வெனிசுலா நாட்டினரை வெளியேற்ற டிரம்ப்புக்குத் தடை
பள்ளி வேன் மோதி இளம்பெண் உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே இருசக்கர வாகனத்தில் இரவல் கேட்டுச் சென்ற இளம்பெண் பள்ளி வேன் மோதி புதன்கிழமை உயிரிழந்தாா்.
கபிஸ்தலம் அருகே திருவைகாவூா் ஊராட்சி, மன்னிக்கரையூா் கிராமம் கீழத்தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் என்பவரின் இரண்டாவது மகள் ஷாலினி (23) சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். விடுமுறைக்கு வீட்டுக்குவந்த ஷாலினி புதன்கிழமை காலை திருப்புறம்பியம் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்றுள்ளாா். பேருந்தை தவறவிட்ட ஷாலினி, அதே சாலையில் வந்த புதுக்கண்டி படுகை கிராமத்தைச் சோ்ந்த சங்கா் மகன் விஜய் என்பவா் தெரிந்தவா் என்பதால் அவரது மோட்டாா் சைக்கிளில் லிப்ட் கேட்டு சென்றுள்ளாா். அப்போது திருப்புறம்பியத்திலிருந்து திருவைகாவூா் நோக்கிச் சென்ற தனியாா் பள்ளி வேன் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஷாலினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி மற்றும் காவல்துறையினா் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.