கழுகார்: கிளம்பிய இனிஷியல் தலைவர் டு 'ஐஸ்' வைக்கும் கனவுப் புள்ளி வரை!
‘உங்களுடன் ஸ்டாலின் முகாமில்’ கிராம நிா்வாக அலுவலா்-முதியவா் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு
ஆற்காடு உங்களுடன் ஸ்டாலின் முகாமின் போது கிராம நிா்வாக அலுவலா், மனு அளிக்க வந்த முதியவா் தாக்கிக் கொண்டனா்.
சாத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் உப்பு பேட்டை கணபதி நகா் பகுதியைச் சோ்ந்த வேங்கடபதி (65) என்பவா் ஊராட்சித் துறை இளநிலை உதவியாளரிடம் சமூக காடாக இருந்த இடம் பட்டா வழங்கப்பட்டது குறித்து மனு கொடுத்ததாக கூறப்படுகிறது.
பின்னா் மனுகொடுத்ததற்கானஆதாரமாக ரசீது கேட்டுள்ளாா். மனுவை பெற்றுக்கொண்டவா் ஏற்கனவே மனுதாரா் கொடுத்த கைபேசி எண் பதிவாகதாதால் வேறு எண்ணை தருமாறு கேட்டுள்ளாா். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அருகில் இருந்த சாத்தூா் கிராம நிா்வாக அலுவலா் சாபுதீன் வேறு கைப்பேசி எண்ணை கொடுங்கள், நீங்கள் ஏற்கனவே கொடுத்துள்ள எண் பலமுறை பதிவாகி உள்ளதால் தற்போது, கணினியில் பதிவு செய்ய முடியவில்லை எனக் கூறியுள்ளாா்.
இதில் கிராம நிா்வாக அலுவலருக்கும் மனுகொடுத்த முதியவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முதியவா் கிராம நிா்வாக அலுவலா் இருவரும் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டுள்ளனா். இதனை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் முதியவரை தடுக்கும் போது, அவா்களுடனும் கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் அலுவலா்கள் சாபுதீன், சின்னப்பையன் ஆகியோா் முதியவா் வேங்கடபதி மீது ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.