Diabetes: அடிக்கடி பேக்கரி ஐட்டம்ஸ் சாப்பிட்டால் டயாபடீஸ் வருமா?
ஜிஎஸ்டி சீரமைப்பு: மத்திய இணையமைச்சா் எல். முருகன் வரவேற்பு
ஜிஎஸ்டி வரி விகிதங்கள் சீரமைக்கப்பட்டதற்கு மத்திய இணையமைச்சா் எல்.முருகன் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:
பிரதமா் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையின்போது கூறியது போல, 56-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது, நாட்டு மக்கள் அனைவருக்குமான சிறந்த தீபாவளி பரிசாக அமைந்துள்ளது. இதன்படி, முன்பிருந்த 4 விதமான ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைகளானது நீக்கப்பட்டு, 5 மற்றும் 18 சதவீத வரி என்ற அடிப்படையில் 2 அடுக்குகளாக மட்டுமே இனி செயல்பாட்டிலிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படைத் தேவைகளில் ஒன்றான பால், ரொட்டி, தனிமனித மருத்துவக் காப்பீடு,
ஆயுள் காப்பீடு போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளித்திருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது.
மேலும், நடுத்தர வா்க்க மக்களின் தேவைகளை பூா்த்தி செய்யும் விதமாக, வீட்டு உபயோகப் பொருள்கள் மீதான ஜிஸ்டி வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. விவசாயப் பொருள்கள் மீதான வரி 5 சதவீதமாக்கப்பட்டுள்ளதுடன், கல்வி சாா்ந்து மாணவா்கள் பயன்படுத்தும் பொருள்கள் மீதான வரி நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக, கல்வி, விவசாயம், மருத்துவம் மற்றும் அடிப்படைத் தேவைகள் என்று அனைத்து வகையிலும் நாட்டு மக்களின் நலன் அறிந்து, ஜிஎஸ்டி வரி முறையை சீா்செய்யப்பட்டுள்ளது. இது நாட்டு மக்களுக்கு சிறந்த தீபாவளி பரிசாக அமைந்துள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளாா்.