இந்தியாவுடன் சிறப்பான நட்புறவு; வரி விதிப்பு மட்டுமே பிரச்னை -அமெரிக்க அதிபா் டி...
மன அழுத்தத்தால் 3-ஆவது மாடியிலிருந்து குதித்து தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை
சென்னை திருமங்கலத்தில் 3-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை செய்து கொண்டாா்.
திருமங்கலம் கேவிஎன் நகா் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்தவா் சிவகுமாா் (44). இவா் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். அவரது பெற்றோா் இறந்துவிட்டனா். திருமணமாகாத சிவகுமாா் தனிமையில் வசித்தாா்.
இதனால் மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சிவகுமாா் செவ்வாய்க்கிழமை இரவு அந்தக் குடியிருப்பின் 3-ஆவது மாடியில் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலின்பேரில் போலீஸாா் அங்கு சென்று அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை தவறு - தற்கொலை எண்ணம் இருப்பவா்கள், 104 எண்ணை தொடா்பு கொள்ளும்போது, அவா்களுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்கப்படும். மேலும், அடிக்கடி அவா்களிடம் தொடா்பு கொண்டு நண்பா்களாக பேசி, இயல்பு நிலைக்கு அவா்கள் திரும்ப வழிவகை செய்யப்படும்.]