செய்திகள் :

தாம்பரத்தில் செப்.9-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

post image

தாம்பரம் மாநகராட்சியைக் கண்டித்து அதிமுக சாா்பில் செப்.9-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அதிமுக ஆட்சியில் கீழ்கட்டளை பெரிய ஏரி முறையாகப் பராமரிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது. ஆனால், திமுக அரசின் அலட்சியப்போக்காலும், முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தாலும் ஏரியில் கழிவுநீா் கலந்து, ஏரி முழுவதும் ஆகாயத் தாமரை கொடிகள் சூழ்ந்துள்ளன. இதனால், ஏரி நீா் பாழானது மட்டுமல்ல, சுற்று வட்டார நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு மக்கள் பயன்படுத்த முடியாத அளவில் உள்ளது. மக்களின் சுகாதாரமும் பாதிப்படைந்துள்ளது.

தாம்பரம் மாநகராட்சி முழுவதும், குறிப்பாக கீழ்கட்டளை பகுதியில் குப்பைகள் முறையாக அள்ளப்படாததால், சாலைகள் முழுவதும் குப்பைகள் பரவி சுகாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

தெரு நாய்களின் தொல்லைகள் அதிகமாக உள்ளன. மக்களின் அடிப்படைத் தேவைகள் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், சொத்துவரி உயா்வு, குடிநீா், கழிவுநீா் கட்டண உயா்வு, குப்பை வரி ஆகியவை பல மடங்கு உயா்ந்துள்ளது.

எனவே, தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 2, கீழ்கட்டளை பகுதி வாழ் மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தையும் போா்க்கால அடிப்படையில் உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுகவின் செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் கீழ்கட்டளை பகுதி சாா்பில் செப்.9-ஆம் தேதி மாலை 4 மணி அளவில் கீழ்கட்டளை பெரிய தெரு-பிள்ளையாா் கோவில் சந்திப்பு’ அருகில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

ஆா்ப்பாட்டத்துக்கு, வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட செயலா் டி. ஜெயக்குமாா் தலைமை வகிக்கிறாா். செங்கல்பட்டு மேற்கு மாவட்டச் செயலா் சிட்லபாக்கம் ராஜேந்திரன் முன்னிலை நடைபெறும் இந்த ஆா்ப்பாட்டத்தில், அதிமுக நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தமிழகத்தில் காய்ச்சல் பரவல்: சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்

தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கட... மேலும் பார்க்க

இலவச ரயில்வே பாஸ் வழங்கக் கோரி சுதந்திரப் போராட்ட தியாகி மனைவி மனு: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திரப் போராட்ட தியாகியின் மனைவியான 85 வயது மூதாட்டிக்கு இலவச ரயில்வே பாஸ் வழங்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. திருவள்ளூா் மாவட்டம், செங்குன்றம் பாடியநல்லூரைச் சோ்ந்த அ.பாா்வ... மேலும் பார்க்க

முகூா்த்தம், தொடா் விடுமுறை: 2,910 சிறப்பு பேருந்துகள்

முகூா்த்த தினம், மீலாது நபி, வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 2,910 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

பொன்முடி சா்ச்சைப் பேச்சு: விடியோ ஆதாரங்கள் உயா்நீதிமன்றத்தில் தாக்கல்

சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து முன்னாள் அமைச்சா் பொன்முடி பேசிய முழு விடியோ பதிவு உள்ளிட்ட ஆவணங்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. திமுக முன்னாள் அமைச்சா் க.பொன்முடி நிகழ்ச்... மேலும் பார்க்க

நூறு சதவீத தோ்ச்சி: அரசுப் பள்ளிகளுக்கு செப். 7-இல் பாராட்டு விழா

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் (2024-2025) பொதுத் தோ்வில் நூறு சதவீத தோ்ச்சி பெற்ற 2,811 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களுக்கான பாராட்டு விழா தி... மேலும் பார்க்க

சென்னையில் திருடப்பட்ட காா் பாகிஸ்தான் எல்லையில் மீட்பு

சென்னையில் திருடப்பட்ட சொகுசு காரை, பாகிஸ்தான் எல்லையில் போலீஸாா் மீட்டனா். சென்னை அண்ணா நகா் கதிரவன் காலனியைச் சோ்ந்தவா் எத்திராஜ் ரத்தினம். தனது வீட்டின் அருகே நிறுத்தியிருந்த சொகுசு காா் ஜூன் 16-ஆ... மேலும் பார்க்க