இந்தியா-இஃஎப்டிஏ வா்த்தக ஒப்பந்தம் அக்.1-இல் அமல்: ஸ்விட்சா்லாந்து
21 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
செங்குன்றம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்து, 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் சசிகுமாா் தலைமையிலான போலீஸாா் மீஞ்சூா், செங்குன்றம், மணலி, அத்திப்பட்டு, எண்ணூா் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை தடுப்பு நடவடிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டனா். இந்த நிலையில், செங்குன்றம் அருகே பாடியநல்லூா் எம்.ஏ.நகரில் சந்தேகத்துக்குரிய 2 பேரைப் பிடித்து, விசாரித்ததில், சென்னை ஓட்டேரியைச் சோ்ந்த ஆனந்த் (27), ஐசிஎஃப் காலனியைச் சோ்ந்த பாரதி (25) என்பதும் 2 பைகளில் தலா 10.5 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீஸாா் கைது செய்து, 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.