செய்திகள் :

NDA: `தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்!' - டிடிவி தினகரன் அறிவிப்பு

post image

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் 'அதிமுக' வை ஒன்றிணைப்போம் என வி.கே. சசிகலாவும், ஓ.பன்னீர் செல்வமும் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதிகார பலத்தை விட்டுக்கொடுக்காமல் 'அதிமுக'வில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தீவிரமாகத் தேர்தல் வியூகம் வகுத்து வருகிறார்.

இதற்கிடையில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தவித முக்கியப் பதவியும் இல்லாமல் இருந்தார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

சமீபத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக எந்தக் கூட்டணியில் இடம்பெறும் என வரும் டிசம்பர் மாதம் அறிவிப்பேன். துரோகம் தலைவிரித்து ஆடுகின்றது எனவும் அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும்." என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது பாஜக கூட்டணியில் இருந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

ஜிஎஸ்டி வரி குறைப்பு செப்.22 முதல் அமல் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில், அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம... மேலும் பார்க்க

Manipur செல்லும் MODI | GST Council : எந்தெந்த பொருள்களின் விலை குறையும்? | Imperfect Show 3.9.2025

* மணிப்பூர் செல்லும் மோடி... எப்போது?* பிரதமர் பயணம்: காலம் தாழ்ந்த செயல்?* என் தாயை அவமதித்தவர்களை பீகார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - மோடி?* பேரணியின்போது போலீசாரால் பைக்கை இழந்தவருக்கு புதிய பைக் ... மேலும் பார்க்க

புதின்: "ரஷ்யாவை எதிரியாகச் சித்திரிக்கும் திகில் கதைகள்..." - ஐரோப்பிய நாடுகள் மீது விமர்சனம்

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், தான் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை ஒருபோதும் எதிர்த்ததில்லை எனக் கூறியுள்ளார். அத்துடன் உக்ரைன், ரஷ்யா இரு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரு தீர்வை ... மேலும் பார்க்க

"அன்புமணிக்கு கெடு விதிப்பு; செப் 10-ம் தேதிக்குள் பதில் அளிக்காவிட்டால்..." - ராமதாஸ் எச்சரிக்கை

பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி இடையேயான மோதல் போக்கு முடிவுறாமல் தொடர்ந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நட... மேலும் பார்க்க

சீனா: ஒன்றுகூடிய புதின், கிம், ஜின் பிங் - ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

சீனாவின் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்துகொண்டதைத் தொடர்ந்து சீனா அமெரிக்காவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதாக பேசியுள்ளார், அ... மேலும் பார்க்க

70 ஆண்டுகளாக மின்சாரம் இல்லை - இருள் நீங்க போராடும் ஆனைமலை பழங்குடி மக்கள்!

கோவை மாவட்டம், ஆனைமலையை சுற்றி 38 கிராமங்கள் உள்ளன. அதில் நெடுங்குன்றம் என்கிற ஒரு கிராமத்தை தவிர மற்ற கிராமங்களில் மின்சார வசதி இல்லை. இவர்கள் பலரும் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு, அப்பர் ஆழியார் ... மேலும் பார்க்க