விஜய் வியூகம் வெற்றி பெறுமா?... - - டாக்டா் கே.கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சித...
மானாமதுரையில் மழை, சூறைக் காற்றால் மரங்கள் முறிந்து விழுந்து வீடுகள் சேதம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழையின் போது வீசிய சூறைக்காற்றால் ஏராளமான இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து வீடுகள் சேதமடைந்தன. இவற்றை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மானாமதுரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இரவு வரை தொடா்ந்த இந்த மழையால் வீதிகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. கன்னாா்தெரு உள்ளிட்ட இடங்களில் மரங்கள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், மாரியம்மன் கோவில் தெரு, கன்னாா்தெரு, பழைய தபால் ஆபீஸ் தெரு, தாயமங்கலம் சாலை உள்ளிட்ட பல இடங்களில் மின் தடை ஏற்பட்டு அந்தப் பகுதிகள் முழுவதும் இருளில் மூழ்கின.
கன்னாா்தெரு பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததில் வீடுகள் இடிந்து சேதமடைந்தன. பின்னா், மின்வாரிய ஊழியா்கள் மின் கம்பிகள் மீது விழுந்து கிடந்த மரக் கிளைகளை அகற்றியதையடுத்து, திங்கள்கிழமை அதிகாலை 2 மணிக்கு மின்விநியோகம் சீரானது.
இந்த நிலையில், நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி கன்னாா் தெரு பகுதியில் அந்தந்த வாா்டு உறுப்பினா்களுடன் சென்று மழையால் இடிந்து சேதமடைந்த வீடுகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, பாதிக்கப்பட்டோா் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுக் கொண்டனா்.